அதிர்ச்சி சம்பவம்: சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண் காவலரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சி சம்பவம்: சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல்
Published on

சிவகங்கை,

சிவகங்கை அருகே பெண் காவலர் நள்ளிரவில் 3 நபர்களால் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவசர உதவி 100க்கு எண் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் காவலரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com