2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை, அடிதடி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

நெல்லை பேட்டை அசோகர் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் இளவரசன். இவரை கொலை செய்த வழக்கில், மாதவன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் முழு பொறுப்பு) பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

நெல்லை மாவட்டம் வடக்கு சங்கன்திரடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பார்வதி பாஸ்கரன் (19). இவர் அம்பை பகுதியில் அடிக்கடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அம்பை போலீசார் பாஸ்வதி பாஸ்கரனை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரையின் பேரில், பார்வதி பாஸ்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com