2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ (வயது 19). இவரை கடந்த மாதம் 24-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன்(31), மணிகண்டன் மகன் ஆகாஷ்(20) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்து, கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், ஆகாஷ் ஆகியோரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைதான 2 பேரின் குற்ற செய்கையை தடுக்கும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அய்யப்பன், ஆகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள அய்யப்பன், ஆகாசிடம் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com