கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வீரவநல்லூர் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர் இசக்கி என்ற கட்டை (வயது 38). இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் வீரவநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று இசக்கியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் முருகன் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com