தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் 2 வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், டவுன் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, கோவில்பிள்ளைவிளை ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். அங்கு 7.5 கிலோ போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, ஜார்ஜ் சாலையைச் சேர்ந்த சூசைமாதவன் மகன் மரியநவமணி ஸ்மைலன் (வயது 37), தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளையைச் சேர்ந்த சேவியர் மகன் மரியஅந்தோணி ஜேசுசகாயராஜ்(38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பேசிகள், 2 பைக்குகள், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






