திருச்செங்கோட்டில் கஞ்சா விற்றவர் கைது

திருச்செங்கோட்டில் கஞ்சா விற்றவர் கைது
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குமரேசபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 30) என்பவர் கஞ்சாவை சிறு சிறு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,500 மதிப்பு 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com