கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்றவர் கைது
Published on

ஆலங்குடி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலங்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் (வயது 51) என்பவர் அவரது வீட்டின் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் ஆலங்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com