கஞ்சா விற்றவர் கைது

செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்றவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் நேற்று செய்துங்கநல்லூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அங்கு வந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செய்துங்கநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com