கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்றவர் கைது
Published on

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தருவைகுளம் கடற்கரை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக இனிகோநகரை சேர்ந்த பட்டுராஜா (வயது 37) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com