திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது: 880 கிராம் பறிமுதல்

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கஞ்சா விற்பனை

விசாரணையில் அவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(எ) மொட்டை மணி (வயது 37) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

880 கிராம் கஞ்சா பறிமுதல், கைது

அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 880 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com