

ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பில் குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான வசந்தம் க.கார்த்திகேயன் கலந்து கொண்டு மேலப்பழங்கூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மின்கல சுமைதூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.