குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குழந்தைகளின் எதிர்காலம் நாம் செய்யும் செயல்களில்தான் இருக்கிறது என கூறினார்.
சென்னை,
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
மக்களுக்கு சுய ஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் நாம் செய்யும் செயல்களில்தான் இருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சி மட்டுமின்றி பசுமை பொருளாதாரமும் நமது கனவாக இருக்க வேண்டும். மஞ்சப்பை திட்டம் அரசின் திட்டமாக இருந்தால்போதாது அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
காடுதான் மூச்சுவிட உதவுகிற நுறையீரல். காடுகளை பாதுகாப்பதற்கான அவசர தேவையை உணர்ந்து பல ஆண்டுகளாக கவணிக்கபடாமல் இருந்த காலிபணியிடங்களை நிறப்பிய நம்முறைடைய வனத்துறை அமைச்சருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வனக்காவலர்கள் நியமன ஆணையை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்.
இந்தியாவிலேயே சுற்றுசூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை திட்டங்கள் இல்லை. அந்த அளவிற்கு கடந்த 4 ஆண்டுகளாக தொலைநோக்கோடு முன்னொடுப்புகளை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் ஒருங்கினைந்த சுற்றுச் சூழல் கட்டமைப்பை உருவாக்கினோம். அதன் கீழ் நான்கு முதன்மை இயக்கங்களை அமைத்துள்ளோம்.
முதலாவது தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
இரண்டாவது தமிழ்நாட்டில் 21 ஈர நிலங்கள் கொண்ட மாநிலம் என சாதனை படைத்துள்ளோம்,
மூன்றாவதாக தமிழ்நாடு காலநிலை திட்டம் மூலம் கார்பன் எமிஷனை கட்டுபடுத்த முக்கியமான பணிகளை செய்து கொண்டு வருகிறோம்.
நான்காவதாக தமிழ்நாடு நெய்தல் மீட்பு திட்டமாக உலக வங்கியுடன் இணைந்து 1625 கோடி மதிப்பிட்டில் முக்கிய கடலோர பகுதியின் தாங்கு திறனை வழுப்படுத்தி வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் 7000 ஹெக்டருக்கும் அதிகமான 65 புதிய வனகாப்பகங்களுக்கு சட்டப்பூர்வ பாதிகாப்பு அறிவித்துள்ளோம். அகத்தியன் மலை யானை காப்பகம், தெற்கு காவேரி வனவிலங்கு காப்பகம் , தந்தை பெரியார் வனவிலங்கு காப்பகம் உள்ளிட்ட 7 வன உயிரின சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல்லுயிர்ப் பெருக்கம், காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையே வலுவான தொடர்பு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில் துறை வளர்ச்சியில் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்பதோடு, பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதே இலக்கு, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது துணிப்பை, தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வோம்; மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம்; குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என கூறினார்






