குப்பை லாரி மோதி விவசாயி பலி

குப்பை லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குப்பை லாரி மோதி விவசாயி பலி
Published on

காஞ்சீபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குமரகோட்டம் முருகன் கோவில் அருகே மேற்கு ராஜ வீதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார். உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com