பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

சிதம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.
பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
Published on

புவனகிரி, 

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பெரியார் பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் நடைபெற்தறு. இதற்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். அருள், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் வரவேற்றார்.கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார், மேற்கு ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி, மாணவரணி செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, லதா ராஜேந்திரன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ. அலுவலக உதவியாளர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் தன கோவிந்தராஜன், செயலாளர் கருப்புராஜா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com