மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலி

பாணாவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலி
Published on

பாணாவரத்தை அடுத்த குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). ஆற்காட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். மேல்வீராணம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com