தை பிரம்மோற்சவத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோவிலில் கருட சேவை

தை பிரம்மோற்சவத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.
தை பிரம்மோற்சவத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோவிலில் கருட சேவை
Published on

திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய இரு பிரம்மோற்சவம் நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவ பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கோவிலில் தை பிரமோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை மாலை என இரு வேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடைபெறுகிறது. 3-ம் நாளான நேற்று காலை உற்சவர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 மணிக்கு கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com