திருநெல்வேலியில் 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் 23.11.2026 அன்று மாலை 5 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் / தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக மேற்சொன்ன கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

X