கேஸ் தட்டுப்பாடு: விறகு, மின்சார அடுப்புகளை தயாராக வைத்திருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சிலிண்டர் தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் எந்த பிரச்சினையும் இப்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கேஸ் தட்டுப்பாடு: விறகு, மின்சார அடுப்புகளை தயாராக வைத்திருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சிலிண்டர் தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் எந்த பிரச்சினையும் இப்போது இல்லை. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை கேன் டீன்களில் பாதிப்பில்லை. மருத்துவக்கல்லூரி, முதல்வர்கள், மாவட்ட இணை இயக்குநர்கள் உடனான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பயனாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் விறகு அடுப்பு, எலக்ட்ரிக் அடுப்புகள் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com