பள்ளிபாளையம் அருகேசேதமடைந்த ஆனங்கூர் ரெயில்வே கேட் சீரமைப்பு

பள்ளிபாளையம் அருகேசேதமடைந்த ஆனங்கூர் ரெயில்வே கேட் சீரமைப்பு
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் வெப்படை அருகே ஆனங்கூர் பகுதியில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற லாரி மோதியதில் ரெயில்வே கேட் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் நேற்று வந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு ரெயில்வே கேட் சீரமைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com