மூடிய கேட்டை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி பலி... காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் இறந்த பரிதாபம்

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற முயன்றபோது கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற முதியவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பாற்ற முயன்றபோது விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் கோபுராஜபுரம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் (30) பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோபுராஜபுரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தியோதயா ரெயிலுக்காக கேட்டை பூட்டி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மூடியிருந்த ரெயில்வே கேட்டை மீறி தண் டவாளத்தை கடக்க முயன்றார்.

இருவரும் உடல் சிதறி பலி

அந்த நேரத்தில் ரெயில் அருகில் வந்துவிட்டதால் இதனைக்கண்ட கேட் கீப்பர் ராகுல், அந்த முதியவரை தண்டவா ளத்தில் இருந்து விலகுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அந்த முதியவர் தண்டவாளத்தை கடப்பதற்குள் ரெயில் மிக அருகில் வந்துவிட்டது. இதை கவனித்த கேட்கீப்பர் ராகுல், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அவ ரைத் தள்ளிவிட்டு அவரை காப்பாற்ற முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் விபத்தில் சிக்கினர். இருவரும் ரெயிலில் சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரெயில்வே போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com