

சின்னமனூர் அருகே உள்ள கருங்கட்டான்குளத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). இவர், வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு வந்தார். அப்போது தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ராஜதுரை (23), பாண்டீஸ்வரன் (22), அனீஸ் குமார் (20), அருண்குமார் (23) ஆகிய 4 பேரும் கோவில் திருவிழாவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக விற்கப்படும் ஊது குழலை வைத்து சத்தமாக ஊதினர். இதை வசந்தகுமார் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தையில் பேசி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் வழக்குப்பதிந்து வசந்தகுமார், ராஜதுரை, கார்த்திகேயன் உள்பட 8 பேரை கைது செய்தார்.