ஜெம் வீரமணி வழக்கு: 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது அம்பலம்

ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சிறுமிகளின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.


ஜெம் வீரமணி வழக்கு: 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது அம்பலம்
Published on: 

சென்னை,

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் சிக்கியுள்ள 'ஜெம்' வீரமணி மீது கோர்ட்டில் 2-வது குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது அம்பலமாகி உள்ளது.

2-வது குற்றப்பத்திரிகை

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புகாரில் சிக்கி தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி கைது செய்யப்பட்டு, சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஊழியர்களாக வேலை பார்த்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், லாசர், கணேசன், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன், பாலா ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணி மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சிறுமிகளின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அவர் மீது இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கில், கடந்த 11-ந்தேதியன்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜெம் வீரமணி, அவரிடம் வேலை பார்த்த ஊழியர்கள் பாபு, பார்த்திபன் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 17-ந்தேதியன்று குற்றப்பத்திரிகை நகல்கள், ஜெம் வீரமணி உள்ளிட்ட 3 பேர்களிடம் வழங்கப்பட்டது. 20-ந்தேதி யன்று அவர்கள் 3 பேர்கள் மீதும் குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 23-ந்தேதியன்று வீரமணி மீது 2-வது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்தி ரிகை தாக்கலாகியுள்ளது. இதில் ஜெம் வீரமணி, ஊழியர்கள் சாந்தி, லாசர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர்.

பிரகாசை கைது செய்ய தீவிரம்

இந்த வழக்கில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபர் பிரகாசை, முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவரது 'பாஸ்போர்ட்' முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டு, விமான நிலையங்களுக்கு அவர் குற்றவாளி என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அவர் மீது 'புளூ கார்னர்' நோட்டீசும் வழங்கி, உலகம் முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக் கும் அவரை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எங்காவது ஒரு விமான நிலையத்திற்கு சென்றால், விமான நிலைய அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக, இந்த நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். அடுத்து 'ரெட் கார்னர்' நோட்டீசும் வழங்கி சர்வ தேச போலீஸ் உதவியுடன், பிரகாசை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

X