ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

ஜெம் வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு
Published on: 

சென்னை,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 'ஜெம்' கிரானைட் தொழில் அதிபர் வீரமணி (வயது 84) போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன், மேலாளர் சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வீரமணி மீது 7 போக்சோ வழக்குகள் உள்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு வீரமணியின் முதல் வழக்கில் 720 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெம் வீரமணி மீதான வழக்கை முறையாக கையாளவில்லை என அருண் ஐ.பி.எஸ்., சென்னையில் கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், உதவி ஆணையர் யாஷ்மின் உள்ளிட்ட 7 காவல் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அருண் ஐ.பி.எஸ்., உள்பட 7 காவல் அதிகாரிகளின் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

X