ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை

ஜான் பாண்டியனிடம் சிறப்பு விசாரணை குழு (SIT) விசாரணை நடத்தி உள்ளது.
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை
Published on: 

சென்னை,

ஜெம் வீரமணி கைதான வழக்கு குறித்து ஜான் பாண்டியனுக்கு தெரியும் என காங்கிரஸின் ரஞ்சன் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

8 பேர் கைது

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் 8 வழக்குகள் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 பேருக்கு சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மணி நேரம் விசாரணை

இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியனை வைத்து பேரம் பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் கூறியிருந்த நிலையில், ஜான் பாண்டியனுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சமரச பேச்சுவார்த்தை

முன்னதாக, வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர் அழைப்பின் பேரில்தான் சமரச பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும், சிறுமிகள் பாலியல் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com