ஜெம் வீரமணியின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

ஜெம் வீரமணியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜெம் வீரமணியின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
Published on: 

சென்னை,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப் பட்ட தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணிக்கு எதிராக இதுவரை 11 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அடிப்படையில் அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் 4 வழக்குகளில் வீரமணி ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது மேலும் 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்காக வீரமணி, போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவரை, வருகிற 10-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழு முடக்கியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்கும் நோக்கிலும், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகவும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com