பொறியியல் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..!
Published on

சென்னை,

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது,

இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை தொடங்கி இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com