பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
Published on

இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டவழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும்.

பயன்பெறலாம்

ரேஷன் கடைகளுக்கு வரஇயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது வினியோக கடைகளின் செயல்பாடு, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் சேவைகளில் குறைப்பாடு இருப்பின் குறைகளை தெரிவித்தால் விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்ப்படும்.

குறைகள் இருப்பின் பொதுமக்கள் இந்தசிறப்பு முகாமில் மனுசெய்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com