விக்கிரவாண்டி தாலுகாவில்பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

விக்கிரவாண்டி தாலுகாவில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தாலுகாவில்பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
Published on

விக்கிரவாண்டி, ஜன.23-

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அய்யங்கோயில்பட்டை சேர்ந்த திருநங்கைகள் குடும்ப அட்டை கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுக்களை வாங்கிய கலெக்டர் மோகன் திருநங்ககைளுக்கு குடும்ப அட்டையை உடனடியாக வழங்க வேண்டும் என தனி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

இதில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, நேர் முக உதவியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், தனி தாசில்தார் வேலு, வருவாய் ஆய்வாளர் தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரசாத், வட்ட பொறியாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள், திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com