கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் விபத்தில் பலி

கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் விபத்தில் பலியானார்.
கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் விபத்தில் பலி
Published on

ஜோலார்பேட்டை

கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் விபத்தில் பலியானார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பாதர் கெசு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56), ஜோலார்பேட்டையில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி -திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் ஆய்வு வருகின்றனர்.

விபத்தில் இறந்த ராஜாவுக்கு மீனாகுமாரி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com