சிவகாசியில் பெண் குழந்தைகள் தினம்

சிவகாசியில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
சிவகாசியில் பெண் குழந்தைகள் தினம்
Published on

தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறையின் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து விடியல் கலைக்குழுவினர் மூலம் கல்வியின் அவசியம், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையூர் அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆணையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல குழுவின் உறுப்பினர் ராஜகோபால், மனித வர்த்தகம் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவமணி, ராஜேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அதிகாரி திருப்பதி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com