பிறந்த 3 வாரங்களில் பெண் குழந்தை சாவு

அரூர் அருகே பிறந்த 3 வாரங்களில் பெண் குழந்தை இறந்தது.
பிறந்த 3 வாரங்களில் பெண் குழந்தை சாவு
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு 3-வது பெண் குழந்தை பிறந்தது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை சித்தேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது. இதுதொடர்பாக சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com