தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தநகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி அனிதா (வயது 23). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com