இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே வாடியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அருள்ராஜா (வயது 30). இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அருள் ராஜா சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபத்தில் வீட்டை விட்டு அருள்ராஜா வெளியேறினார். தொடர்ந்து நந்தினி தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு அருள்ராஜா வந்தார். அங்கு தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்றார். அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். நந்தினிக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com