இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திசையன்விளையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திசையன்விளை:

திசையன்விளை எஸ்.பி. காம்பவுண்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பிரபு யோஸ்வா. இவருடைய மனைவி பால்கனி (வயது 30). இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிரபு யோஸ்வாவிற்கும், அவரது மனைவி பால்கனிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பால்கனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமு திசையன்விளை போலீசில் புகார் செய்தார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com