இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி தங்கம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. தொழிலாளியான இவரது மனைவி முத்துக்கனி. இவர்களின் மகள் கவுரி (வயது 21). இவர் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியர் பயிற்சி பெற்றார். அதன்பின்னர் கவுரி புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவுரி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் அவர் வேறு எங்கும் வேலைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் கவுரி கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com