சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கொண்டலாம்பட்டி:

எடப்பாடி சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி செல்வி. இவர்களது மகள் தர்ஷினி (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நாகராஜ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தாய் செல்வியின் பாதுகாப்பின் இருந்து வந்த தர்ஷினி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த செல்வி, தனது மகளை கண்டித்ததுடன், அறிவுரையும் வழங்கி உள்ளார். மேலும் செல்வி கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகளை அழைத்து வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று தர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com