சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

பூதப்பாண்டி அருகே பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

8-ம் வகுப்பு படித்தவர்

கொல்லங்கோடு மஞ்சதோப்புகாலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஷோபா (வயது16) என்ற மகளும் உண்டு. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இரண்டு மகன்களுடன் கணவரை விட்டு பிரிந்து சென்றார்.

அதன்பின்பு கண்ணன் தனது மகள் ஷோபா மற்றும் தாய், தந்தையுடன் பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

சிறுமி ஷோபா 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் ஷோபா பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஷோபா கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கடந்த நிலையில் அவரது பாட்டி வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டிய நிலையில் இருந்தது. அவர் ஷோபாவை அழைத்த போது உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷோபா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com