இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ். இவரது மனைவி தெய்வக்கனி (வயது 33). கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தெய்வக்கனி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தெய்வக்கனி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com