இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அம்பை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அம்பை:

அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் வேங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவரது மனைவி சரண்யா (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மாரியப்பன் கேரளாவில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த சரண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com