மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மீஞ்சூர் அருகே கல்பாக்கம் கிராமத்தில் உள்ள திருவீதியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பிரகாஷ் (வயது 28). இவர் வீட்டின் அருகே டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவி விஜயலட்சுமியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் இதுகுறித்து விஜயலட்சுமியின் தாய் அமுதாவிற்கு தகவல் தெரிவித்தார். அமுதா தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திற்கு சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பிரகாசிடம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கல்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com