வீட்டில் பெண் மர்ம சாவு

வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வீட்டில் பெண் மர்ம சாவு
Published on

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வசித்தார்

தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் ஊரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மனைவி வள்ளித்தாய் (வயது 55). இவர்களுடைய மகன் தமிழ்செல்வம். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் வன்னிக்கோனேந்தல்- கூவாச்சிப்பட்டி ரோட்டில் உள்ள வடக்குத்தெருவில் வள்ளித்தாய் தனியாக வசித்து வந்தார்.

மர்ம சாவு

இந்நிலையில் வள்ளித்தாய் திடீரென்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பதாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வள்ளித்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், வள்ளித்தாய் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com