மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி

படப்பை அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியானார்.
மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி
Published on

மொபட்- லாரி மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 35), இவர் வண்டலூர் அருகே உள்ள கண்டிகை கிராமத்திற்கு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் மொபட்டில் உறவினர்கள் பிரசாந்த், அஜித் மற்றும் கணபதியின் மகள் அவந்திகா (வயது 6) ஆகியோர் வந்து கொண்டிருந்தவர். கொளப்பாக்கம் அருகே செல்லும் போது வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் மொபட்டில் வந்த அவந்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மொபட்டில் வந்த பிரசாந்த், அஜித் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com