திட்டக்குடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

திட்டக்குடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டக்குடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
Published on

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் குரு (வயது 22). இவர் சண்டிகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இருவரும் குடும்பத்துடன் சண்டிகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து வளைகாப்பு நடத்துவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு, சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என சிறுமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டா அந்தப் பெண்ணின் உடலில் ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே, சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்தது குறித்து, கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அவர்களது தகவலின் பேரில், நல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புண்ணியவதி (58) நேற்று ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், குழந்தை திருமணம் செய்ததாக கூறி குரு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com