

திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் காகிதப்பட்டறை கீழ அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடய மகன் மணி(வயது 30). இவர் மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.