அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

பொதுமக்கள் அந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் திருத் தணி அரசு ஆஸ்பத்திரியில், வருவாய் கோட்ட அளவில் உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி முகாமில் பங்கேற்றார்.

பரிசோதனைகள் முடிந்து சிறுமி கழிப்பறை அருகே தனியாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்ட நபர் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் (வயது 25) தெரிய வந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முகாமில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com