ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை

சிறுமியின் நண்பர்களான நான்கு சிறுவர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் நம்கும் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 31-ந் தேதி பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் 15 வயது சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சென்று கலந்து கொண்டார். அப்போது அங்கு மது அருந்திய சிறுமியின் நண்பர்க ளான நான்கு சிறுவர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் சம்பவம் குறித்து வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கடந்த 16-ந் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 15 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com