விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; துணை நடிகர் கைது

விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.
விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; துணை நடிகர் கைது
Published on

விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் ராஜ் (வயது 47). இவர் சினிமா மற்றும் நாடகங்களில் துணை நடிகராக நடித்த வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த 'எலி' படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்த போது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சீதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் துணை நடிகர் ராஜ், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com