சிறுமி இறப்பு - 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறுமி இறப்பு - 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Published on

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த தம்பதி பழனிவேல்-சிவசங்கரி. இவர்களுக்கு லியா லட்சுமி (4 வயது) என்ற குழந்தை இருந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையும் உள்ளது. லியா லட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். குழந்தை லியா லட்சுமி கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (03.01.2025) பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு தகடு துருப்பிடித்து இருந்த நிலையில், மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது.

சிறுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோம்னிக் மேரி மற்றும் வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று(08.01.2025) விழுப்புரம் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எமில்டா, டோம்னிக் மேரி, ஏஞ்சல் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com