

மதுரை,
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக சாட்சி அளித்த காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து விசாரணையின் போது, கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும்
சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கை உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.