எனக்கு வாய்ப்பு தாருங்கள்... வேலைக்காரனாய் இருந்து பணி செய்வேன்: நடிகர் மன்சூர் அலிகான்

கல்லக்குடி ஊரணியில் நடிகர் மன்சூர் அலிகான் துணிகளை துவைத்து வாக்கு சேகரித்தார்.
எனக்கு வாய்ப்பு தாருங்கள்... வேலைக்காரனாய் இருந்து பணி செய்வேன்: நடிகர் மன்சூர் அலிகான்
Published on

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கல்லக்குடி ஊரணியில் பெண்களின் துணியை துவைத்து கொடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என்னை வெற்றி பெற செய்தால் விவசாயிகளின் கனவான வாழை கொள்முதல் நிலையம், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தொகுதியில் நின்று வருகிறேன். நான் எப்பவும் கைக்காசை போட்டு நிப்பேன், இது எனக்குப் பழக்கமாயிடுச்சு

லால்குடி தொகுதி புண்ணிய பூமி, பாரம்பரியமான பூமி. காமராஜர் முதல் பெரியார் வரை உள்ள தலைவர்கள் மாட்டு வண்டியில வந்து பிரசாரம் செய்த ஊர். 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என ஆட்சி செய்தவர்கள் தொகுதிக்கு ஒன்றும் செய்யாமல் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு போய்விடுகிறார்கள். எனக்கு வாய்ப்பு தாருங்கள். அனைத்து சமூக மக்களின் வேலைக்காரனாய் இருந்து உங்களுக்கு பணியிடை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com